தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு, தனியார் பஸ் இடையே டைம் பிரச்னை: பயணிகள் அவதி

 அரசு, தனியார் பஸ் இடையே டைம் பிரச்னை: பயணிகள் அவதி

 அரசு, தனியார் பஸ் இடையே டைம் பிரச்னை: பயணிகள் அவதி


ADDED : ஜன 12, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி பஸ் ஸ்டாண்டில் அரசு மற்றும் தனியார் பஸ்சுகளுக்கு இடையே டைமிங் மோதலால் பயணிகள் பாதிக்கபட்டனர்.

தொண்டி பஸ்ஸ்டாண்டில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் என 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதிக வசூலை காட்ட இரு பஸ் டிரைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு இயக்குகின்றனர்.​ஒரு நிமிடம் முந்தினால் வழியில் நிற்கும் நான்கு பயணிகளை ஏற்றிவிடலாம் என்கிற லாப நோக்கத்தில் செல்கின்றனர். இதனால் டிரைவர்கள் சண்டையிடுவது வாடிக்கையாக நடக்கிறது.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை 9:00 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து பட்டுகோட்டை செல்லும் அரசு பஸ்சும், ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக மங்களக்குடி செல்லும் தனியார் பஸ்சும் 10 நிமிட இடைவெளியில் புறப்பட்டன. கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வேகத்தில் ஓவர்டேக் செய்து ஓட்டினர். தொண்டி பஸ்ஸ்டாண்ட் வந்தவுடன் இரு டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு பஸ்களும் தொண்டி போலீஸ்ஸ்டேஷனுக்கு சென்றன. அங்கு போலீசார் இரு பஸ் டிரைவர்களையும் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து பயணிகள் கூறியதாவது- டிக்கெட் எடுத்துட்டு பஸ்ல ஏறுனா, உயிரோட ஊர் போய் சேருவோமாங்கிற பயத்துலயே இருக்க வேண்டியிருக்கு. ​தனியார் மற்றும் அரசு பஸ்சுகளுக்கு இடையே போதுமான கால இடைவெளியை போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நேற்று நடந்த பிரச்னையால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஊர்களுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us