/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்புலன்ஸ் மோதியதில் டிங்கரிங் தொழிலாளி பலி
/
ஆம்புலன்ஸ் மோதியதில் டிங்கரிங் தொழிலாளி பலி
ADDED : ஏப் 10, 2025 05:50 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஆம்புலன்ஸ் 108 மோதியதில் ஆட்டோ டிங்கரிங் தொழிலாளி பலியானார்.
ராமநாதபுரம் அண்ணாதுரை சிலை அருகே ஏப்., 7 இரவு தேவிப்பட்டினம் ரோட்டில் இருந்து ராமநாதபுரம் நோக்கி ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற பாப்பாகுடியை சேர்ந்த சோனை மகன் அஜித் 26, மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அஜித் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று உயிரிழந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
அஜித் பேராவூர் பகுதியில் ஆட்டோ டிங்கரிங் ெஷட்டில் தொழிலாளி. இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் 2 மாத குழந்தையும் உள்ளனர்.