/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திட்டங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
/
திட்டங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
திட்டங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
திட்டங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
ADDED : நவ 29, 2024 05:34 AM
கமுதி: கமுதி ஒன்றியத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்த போது அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
கமுதி, அபிராமம், பசும்பொன், கிளாமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளையும், அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகளையும், கோட்டைமேடு பகுதியில் மழைநீர் தேங்காமல் வடிகாலில் செல்லும் வகையில் சீரமைப்பதற்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கமுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிட்டங்கியில் உணவு பொருட்களின் தரம், இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பசும்பொன்னில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணையை ஆய்வு செய்தார்.
அதன் பின் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:
ஒவ்வொரு துறை அலுவலரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். திட்டத்தின் நோக்கம், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.
அந்த வகையில் ஒவ்வொரு துறை அலுவலரும் தங்கள் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களை சந்தித்து தேவையான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
டி.ஆர்.ஓ., கோவிந்தராஜலு, சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி, தாசில்தார் காதர்முகைதீன், பி.டி.ஓ.,க்கள் கோட்டைராஜ், சந்திரமோகன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் இருந்தனர்.

