/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயிலில் புகையிலை பொருள் மோப்ப நாய் மூலம் பறிமுதல்
/
ரயிலில் புகையிலை பொருள் மோப்ப நாய் மூலம் பறிமுதல்
ADDED : ஜூன் 30, 2025 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் ; ராமநாதபுரத்தில் புவனேஷ்வரிலிருந்து ராமேஸ்வரம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மோப்ப நாய் 'ஆரா' வால் 4 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் வழிகாட்டுதலின் பேரில் ஆயுதப்படை டி.எஸ்.பி., முத்துராமலிங்கம் தலைமையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் ஆரா வரவழைக்கப்பட்டு போதை பொருள்கள் குறித்து சோதனை நடத்தினர். புவனேஷ்வரிலிருந்து ராமேஸ்வரம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மோப்ப நாய் ஆரா கேட்பாரின்றி கிடந்த 4 கிலோ புகையிலை பொருட்களை கண்டறிந்தது. அதனை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.