/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் புகையிலை பறிமுதல்
/
ராமேஸ்வரத்தில் புகையிலை பறிமுதல்
ADDED : பிப் 01, 2024 06:54 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த புகையிலையை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், போலீசார் பறிமுதல் செய்து கடைக்காரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ராமேஸ்வரத்தில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் விற்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இதனை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று ராமேஸ்வரம் சின்னவம்பிள்ளை தெருவில் உள்ள கடையில் ராமேஸ்வரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், டவுன் போலீஸ் எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை 3.25 கிலோவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தற்காலிகமாக கடையை மூடி சீல் வைத்து, கடைக்காரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.