/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று தினமலர் நடத்தும் ‛ அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி
/
இன்று தினமலர் நடத்தும் ‛ அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி
இன்று தினமலர் நடத்தும் ‛ அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி
இன்று தினமலர் நடத்தும் ‛ அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி
ADDED : அக் 12, 2024 04:20 AM
ராமநாதபுரம்: தினமலர் மாணவர் பதிப்பு மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் 'அனா... ஆவன்னா' அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட அரண்மனை பின்புறம் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் இன்று (அக்., 12) காலை 8:50 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.
விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். உங்கள் வீட்டு இளந்தளிர்களின் விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நன்னாள். இரண்டரை வயது முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கல்விக்கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க அழைத்து வாருங்கள்.
இலவச நோட்டு பென்சில்: அனுமதியும், பூஜைக்குரிய பொருட்களான சில்வர் தட்டு, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, நோட்டு, பென்சில்,இனிப்பு பொருட்கள் இலவசம்.
கே.ஆர்., தங்க மாளிகை, வாசுதேவன் பாத்திரக்கடை, கே.ராமசாமி பர்னிச்சர் இணைந்து வழங்குகின்றனர்.