/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலியோ சொட்டு மருந்து இன்று கடைசி நாள்
/
போலியோ சொட்டு மருந்து இன்று கடைசி நாள்
ADDED : மார் 05, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : போலியோ சொட்டு மருந்து வழங்க இன்று (மார்ச் 5) கடைசி நாள் என்பதால் பெற்றோர்கள் தவறாது இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்என்று திருவாடானை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறினார்.
அவர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் நேற்று திருவாடானை தாலுகாவில் 10,700 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டது. இதில் 10 ஆயிரத்து 577 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கபட்டுள்ளது.
மீதமுள்ள குழந்தைகளுக்கு இன்று (மார்ச் 5) சுகாதார நிலையங்களில் வழங்கப்படும். பெற்றோர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

