ADDED : செப் 29, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் உள்ள நகராட்சி கழிப்பறை நீண்ட நாட்களாக பயன்பாடில்லாமல் பூட்டிக் கிடந்தது. இதனால் அப்பகுதி மக்கள், வியாபாரம் செய்யும் பெண்கள் சிரமப்பட்டனர். இதனை நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை துாய்மைப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. –––
