sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்: 1077ல் புகார் தெரிவிக்கலாம்

/

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்: 1077ல் புகார் தெரிவிக்கலாம்

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்: 1077ல் புகார் தெரிவிக்கலாம்

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்: 1077ல் புகார் தெரிவிக்கலாம்


ADDED : ஜன 05, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 05, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்க ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.இது தொடர்பான குறைகள்,புகார்களை 1077 மற்றும் 83001 75888 ஆகியகட்டணமில்லா தொலைபேசி எண்களில் பொதுமக்கள்தெரிவிக்கலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுவிநியோகத் திட்டத்தில் அனைத்துஅரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கைத் தமிழர்மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டைத்தாரர் களுக்கும் 1 கிலோபச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியபொருட்கள் வழங்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஜன.3 முதல் 8 வரை கூட்ட நெரிசலைதவிர்க்கும் பொருட்டு அந்தந்த ரேஷன் கடைகளில் பகுதிவாரியாக டோக்கன் வழங்கப்படுகிறது.

ஜன.9 முதல் 13 வரை பொங்கல் தொகுப்பு ரேஷன்கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகைசரிபார்த்து வழங்கப்படும்.

ரேகை பதிவு செய்ய முடியாதவர்களிடம்விபரம் சரிபார்த்து கையொப்பம் பெற வேண்டும்.எக்காரணத்தைக் கொண்டும் வேறு நபருக்கு வழங்க கூடாது.

பொங்கல் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்களுக்கு 1077மற்றும் 83001 75888 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில்தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்தெரிவித்துள்ளார்.

* திருவாடானை சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 39 ஆயிரத்து 688 ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர்.

அந்தந்த பகுதி ரேஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கி வருகின்றனர். அந்த டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வேண்டும். நாள், நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அந்த நாட்களில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us