UPDATED : அக் 07, 2026 07:33 PM
ADDED : அக் 07, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா நுாற்றாண்டு துவக்க விழா செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நாளை(அக்.9ல்) நடைபெறவுள்ளது.
அவரது வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் வெளியீட்டு, நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. சுகிசிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம, கல்வி, சுகாதாரம், கலை, இலக்கிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை செய்யது அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள், டாக்டர்கள் பாபு அப்துல்லா, சின்னத்துரை அப்துல்லா, செய்யதா அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் செய்கின்றனர்.–––
