/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை தை அமாவாசை; ராமேஸ்வரத்தில் ஏற்பாடு
/
நாளை தை அமாவாசை; ராமேஸ்வரத்தில் ஏற்பாடு
ADDED : ஜன 28, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் ; நாளை (ஜன.29தை அமாவாசையில் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருவார்கள்.
அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.பக்தர்கள் சிரமம் இன்றி நீராடவும், கோயிலுக்குள் தரிசனம் செய்யவும் 300 போலீசார் பஸ் ஸ்டாண்ட் முதல் கடற்கரை வரை பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். கோயில் வளாகத்தில் வரிசையில் சென்று நீராட கோயில் நிர்வாகம் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளது.

