/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் டன் கணக்கில் சிக்கிய பாரை மீன்: மீனவர்கள் மகிழ்ச்சி
/
பாம்பனில் டன் கணக்கில் சிக்கிய பாரை மீன்: மீனவர்கள் மகிழ்ச்சி
பாம்பனில் டன் கணக்கில் சிக்கிய பாரை மீன்: மீனவர்கள் மகிழ்ச்சி
பாம்பனில் டன் கணக்கில் சிக்கிய பாரை மீன்: மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 06, 2025 02:55 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் முண்டக்கண்ணி பாரை மீன்கள் டன் கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாம்பனில் இருந்து செப்., 4ல் 95 விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் பெரும்பாலான படகுகளில் முண்டக்கண்ணி பாரை மீன்கள் டன் கணக்கில் சிக்கியன. இவற்றின் கண்கள் பெரிய அளவில் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இந்த மீன்களுக்கு தமிழக மார்க்கெட்டில் மவுசு இல்லாததால் பாம்பன் வியாபாரிகள் கிலோ ரூ.160க்கு வாங்கி பதப்படுத்தி லாரி மூலம் கேரளா மார்க்கெட்டுக்கு அனுப்பினர். இந்த மீன்கள் ஏராளமாக சிக்கியதாலும், உரிய விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.