/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொட்டால் குணமாகும்: அரசு மருத்துவக்கல்லுாரியில் தொடுவர்ம சிகிச்சை
/
தொட்டால் குணமாகும்: அரசு மருத்துவக்கல்லுாரியில் தொடுவர்ம சிகிச்சை
தொட்டால் குணமாகும்: அரசு மருத்துவக்கல்லுாரியில் தொடுவர்ம சிகிச்சை
தொட்டால் குணமாகும்: அரசு மருத்துவக்கல்லுாரியில் தொடுவர்ம சிகிச்சை
ADDED : ஆக 09, 2025 03:21 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சித்தா பிரிவில் தொடுவர்ம சிகிச்சை முறையில் கழுத்து, இடுப்பு, கால் ஆகியவற்றில் ஏற்படும் வலி, சிறுநீரக பிரச்னைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடு வர்மம் என்பது ஒரு தமிழர் பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை தொட்டு அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் ஒரு முறை. இந்த சிகிச்சை முறையில் உடல் வலியை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்து வலி போன்ற நாள்பட்ட வலிகள். முழங்கால் வலி, இடுப்பு வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, பக்கவாதம், முகவாதம்.நரம்பியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு மிக்க தொடுவர்ம சிகிச்சை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சித்தா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் எம்.எஸ். சுஜாதா கூறியதாவது:
மருந்தில்லா மருத்துவ முறையான பாரம்பரிய தொடுவர்ம சிகிச்சை முறை குறித்து சென்னையில் பயிற்சி பெற்றுள்ளேன். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கீதாஞ்சலி உத்தரவுப்படி தற்போது தொடு வர்ம சிகிச்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. தோள்பட்டை, கழுத்து வலி, சைனஸ் தொந்தரவு, அல்சர் போன்றவைகளுக்கு சிகிச்சை பெறலாம்.
இதற்கு காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் வர வேண்டும். காலை 8:00 முதல் 9:00 மணி வரை சிகிச்சை அளிக்கிறோம். இருபாலருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் பெண், ஆண் உதவியாளர்கள் தனித்தனியாக உள்ளனர். மக்களின் வரவேற்பை பொறுத்து பிற இடங்களிலும் பயிற்சி பெற்ற சித்த மருத்துவர்கள் மூலம் தொடுவர்ம சிகிச்சை விரிவுப்படுத்தப்பட உள்ளது என்றார்.