/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையில் சிறுவர் பூங்காவை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
/
கடற்கரையில் சிறுவர் பூங்காவை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
கடற்கரையில் சிறுவர் பூங்காவை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
கடற்கரையில் சிறுவர் பூங்காவை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 11:55 PM

தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில்  பூட்டி கிடக்கும் அம்மா சிறுவர் பூங்காவை,  பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.
தேவிபட்டினம் கடல் பகுதியில் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளதால், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பக்தர்களுடன் வரும் குழந்தைகள் பயனடையும் வகையில் நவபாஷாண கடற்கரையோரத்தில் அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் குழந்தைகள் விளையாடும் வகையில் சறுக்கு விளையாட்டு, நீர் விளையாட்டு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த பூங்கா சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் மீண்டும் பூட்டப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சில நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் பூட்டப்பட்டது.  தற்போது பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
வளாகத்திற்குள் புதர்கள் மண்டி பயனற்ற நிலையில் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் சிறுவர் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.

