/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி வனத்துறை ஸ்டாலில் காலி மதுபாட்டில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
/
தனுஷ்கோடி வனத்துறை ஸ்டாலில் காலி மதுபாட்டில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
தனுஷ்கோடி வனத்துறை ஸ்டாலில் காலி மதுபாட்டில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
தனுஷ்கோடி வனத்துறை ஸ்டாலில் காலி மதுபாட்டில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
ADDED : பிப் 13, 2025 06:46 AM

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி வனத்துறை ஸ்டால் அருகில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
தனுஷ்கோடி கடலில் ஆமை, டால்பின், கடல் பசு உள்ளிட்ட பல அரிய வகை மீன் இனங்கள் வசிக்கின்றன.
இங்கு சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகளை வீசுகின்றனர். இது கடலோரத்தில் பரவி கிடப்பதால் இதனை உட்கொள்ளும் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனை தடுக்கவும், பாலிதீன் குப்பையை அகற்றி பராமரிக்க தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலித்தனர்.
ஆனால் வனத்துறையினர் குப்பை சேகரிப்பதில் கவனம் செலுத்தாததால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள் பரவி கிடக்கிறது.
இதில் வனத்துறையின் எக்கோ ஸ்டால் அருகில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வார்கள்.
ஆனால் இங்கு குடிமகன்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விடுகின்றனர்.
இதனால் காலி பாட்டில்கள், பாலிதீன் கழிவுகள் சிதறி கிடக்கிறது.
இதனை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பராமரிப்புக்காக கட்டணம் வசூலிப்பதில் அக்கறை காட்டும் வனத்துறை குப்பையையும், மது பிரியர்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.