/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரகதப் பூஞ்சோலை செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமம்: நிரந்தரமாக கடல் நீர் தேங்குவதால் தொடர் அவதி

ADDED : மே 22, 2025 11:52 PM

ராமநாதபுரத்தில் 'மரகதப்பூஞ்சோலை' என்ற பெயரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் மரங்கள், புல்வெளிகள் மற்றும் பூச்செடிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். சமூகத்தின் சுற்றுச்சூழலுக்கான பங்களிப்புடன், உள்ளூர் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இயற்கை காடுகளை சார்ந்திருப்பதை குறைத்து கனி தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் மற்றும் பூச்செடிகள் போன்றவற்றை நடவு செய்து சுற்றுச் சூழலை மேம்படுத்துவது இதன் நோக்கம்.
இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் ஆற்றாங்கரை செல்லும் வழியில் ராமேஸ்வரம் ரோட்டோரத்திலும், கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையோரம் அச்சடிபிரம்பு கிராமத்திலும் தலா ரூ.25 லட்சத்தில் மரகதப் பூஞ்சோலை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டு ஆக.,ல் பூஞ்சோலை பூங்காக்களை முதல்வர்ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்விடங்களில் பறவைகள், மான்கள் இரை தேடி வருவதை மக்கள் பார்வையிடலாம்.
இந்நிலையில் தொடர் பராமரிப்பின்றி மரகதப் பூஞ்சோலை வளாகத்தில் மழைநீருடன் கடல் நீரும் நிரந்தரமாக குளம் போல தேங்கியுள்ளது. இதனால் கோடை விடுமுறையை முன்னிட்டு குவியும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
எனவே மரகதப் பூஞ்சோலை சுற்றுச் சூழல் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.