/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரேக் பிடிக்காத டவுன் பஸ் மற்றொரு பஸ் மீது மோதல் மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

ADDED : ஜன 02, 2025 11:45 PM

உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பயணியர் 25 பேரை ஏற்றிய அரசு டவுன் பஸ் ஆலங்குளம் விலக்கு பகுதியில் சென்றது.
அப்போது பிரேக் பிடிக்காமல் ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்துார் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் முதுகுளத்துார் பஸ்சின் பக்கவாட்டுப் பகுதி முழுதும் சேதம் அடைந்தது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அரசு டவுன் பஸ் டிரைவர் ஆலங்குளம் அருகே மேலச்சீத்தையைச் சேர்ந்த ராமர், 47, என்பவர், உட்பட காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.