தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அடையாளம் தெரியாத டவுன் பஸ்

 விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அடையாளம் தெரியாத டவுன் பஸ்

 விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அடையாளம் தெரியாத டவுன் பஸ்


ADDED : ஜன 09, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: அரசு போக்குவரத்து கழகங்களில் விளம்பரத்திற்கு முக்கியத்தும் அளிப்பதால் டவுன் பஸ்கள் அடையாளத்தை இழக்கின்றன. அரசு போக்குவரத்து கழகம் வருவாயைப் பெருக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி பஸ்களில் விளம்பரம் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பஸ்களின் பின்புறம் மட்டும் விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் விரிவடைந்து தற்போது ஒட்டுமொத்தமாக பஸ் முழுவதும் விளம்பரம் செய்யபட்டு வருகிறது.

திருவாடானையை மையமாக வைத்து பல்வேறு கிராமங்களுக்கு 12 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் சில டவுன் பஸ்களில் முழுவதும் விளம்பரமாக இருப்பதால் அடையாளம் தெரியாமல் உள்ளது. பயணிகள் கூறுகையில், விளம்பரத்தால் டவுன் பஸ் என்ற அடையாளமே தெரியவில்லை. இதனால் குழப்பமாக உள்ளது.

ஓட்டை, உடைசல் பஸ்களை சரி செய்வதை விட்டுவிட்டு இது போன்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையில்லாதது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us