ADDED : செப் 17, 2026 07:32 PM
சாயல்குடி: குப்பையை தரம் பிரித்து வழங்குமாறு சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி கூறியதாவது:
சாயல்குடி பேரூராட்சியில் துாய்மைப் பணியை மேம்படுத்தும் நோக்கில் பேரூராட்சி நிர்வாகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பையை நாள் தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு பிரிவுகளாக தரம் பிரித்து துாய்மைப் பணியாளரிடம் வழங்க வேண்டும்.
ஆபத்தான மருத்துவக் கழிவுகள் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், டியூப் லைட்டுகள், மின்னணு கழிவுகள் மற்றும் மாஸ்க் போன்றவற்றை சாதாரண குப்பையுடன் கலக்காமல் தனியாக சேகரித்து வழங்க வேண்டும். அக்.,1 முதல் குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்க தவறும் பட்சத்தில் வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் பெறப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
