/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயிலுக்கு ரூ.4.20 லட்சத்தில் டிராக்டர் தினமலர் செய்தி எதிரொலி
/
திருவெற்றியூர் கோயிலுக்கு ரூ.4.20 லட்சத்தில் டிராக்டர் தினமலர் செய்தி எதிரொலி
திருவெற்றியூர் கோயிலுக்கு ரூ.4.20 லட்சத்தில் டிராக்டர் தினமலர் செய்தி எதிரொலி
திருவெற்றியூர் கோயிலுக்கு ரூ.4.20 லட்சத்தில் டிராக்டர் தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஆக 15, 2025 11:20 PM

திருவாடானை: திருவெற்றியூரில் குப்பையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் குப்பை அள்ள ரூ.4.20 லட்சத்தில் புதிதாக டிராக்டர் வாங்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்று.
கோயிலில் முதல் நாள் தங்கியிருந்து மறுநாள் கோயில் முன்புள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கூடி அங்குள்ள மண்டபங்களில் தங்குவார்கள்.
இது தவிர செவ்வாய், வெள்ளி வார நாட்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆடி வெள்ளி உள்ளிட்ட திருவிழா நாட்களில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வருவார்கள். அரசு அன்னதான திட்டம் செயல்படுகிறது. பக்தர்களால் அதிகமான குப்பை குவிவதால் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.
கோயில் அருகே குப்பை கொட்டி எரிக்கப்பட்டன. புகையால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் செலவில் புதிய டிராக்டர் வாங்கப்பட்டது.
நேற்று முன்தினம் டிராக்டருக்கு பூஜை செய்யப்பட்டது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், சரக ஆய்வாளர் கண்ணன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.