/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிராக்டர் திருட்டு: 3 பேர் கைது
/
டிராக்டர் திருட்டு: 3 பேர் கைது
ADDED : ஜன 13, 2025 06:23 AM
ஆர்.எஸ்.மங்கலம் : தேவிபட்டினம் அருகே டிராக்டரை திருடிய வழக்கில் 3 பேரை தேவிபட்டினம் போலீசார் கைது செய்தனர்.
தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் 29. இவருக்கு சொந்தமான டிராக்டரை திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவிபட்டினம் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். ஜன.5ல் டிராக்டர் திருடப்பட்டது.
தேவிபட்டினம் போலீசார் விசாரணையில் பெரம்பலுார் பிள்ளங்குளம் கிழக்கு காட்டு கொட்டாய் மாதேஷ் மகன் வெங்கடேசன் 27, சேலம் புதுார் தெடாவூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து மகன் தசரதன் 28, ராமநாதபுரம் குளத்துார் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் பாலமுருகன் 30, ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.