/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிராக்டர் - டூவீலர் மோதல்; சிறுவன் கால் துண்டானது
/
டிராக்டர் - டூவீலர் மோதல்; சிறுவன் கால் துண்டானது
ADDED : அக் 01, 2024 05:39 AM
உச்சிப்புளி : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே டிராக்டர்-டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் 14 வயது சிறுவன் கால் துண்டானது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் மகன் விக்னேஷ்வரன் 14. இவர் 9ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஜெகன் 17. பிளஸ் 2 படிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரை சேர்ந்த கணேசன் மகன் நந்தகிேஷார் 18, பிளஸ் 1 படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவர்கள் மூவரும் உறவினர்கள்.
விக்னேஷ்வரன், ஜெகன் இருவரும் நந்தகிேஷார் வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று மதியம் நந்தகிேஷார் டூவீலரை ஓட்ட விக்னேஷ்வரன், ஜெகன் பின்னால் அமர்ந்து அரியமான் கடற்கரைக்கு சென்றனர். ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளம் அருகில்சென்ற போது எதிரில் தேங்காய் ஏற்றி வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதினர்.
இதில் மூவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில் நடுவில் அமர்ந்திருந்த விக்னேஷ்வரன் இடது கால் தொடை வரை துண்டானது. இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டார். மற்ற இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர்.
டிராக்டரை ஓட்டி வந்த சேர்வைக்காரன் ஊருணியை சேர்ந்த தினேஷ்குமார் 34, மீது உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிந்தனர்.