/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடத்தில் தொழிற்சங்கம் மறியல்: 729 பேர் கைது
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடத்தில் தொழிற்சங்கம் மறியல்: 729 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடத்தில் தொழிற்சங்கம் மறியல்: 729 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடத்தில் தொழிற்சங்கம் மறியல்: 729 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 04:47 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில்387 பெண்கள் உட்பட 729 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். பொது விநியோக முறையை விரிவுப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். மின் திருத்த சட்ட மசோதவை திரும்ப பெற வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும்.
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமையில் 207 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதியில் ஸ்டேட் வங்கி முன்பு சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் முத்து விஜயன் தலைமையில் நடந்த மறியலில் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானை ஸ்டேட் வங்கி முன்பு சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம் தலைமையில் 115 பேர், சிக்கல் தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச் செயலாளர் தலைமையில் 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுகுளத்துார் தபால் நிலையம் முன்பு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கணேசன் தலையில் 53 பேர், பரமக்குடி தபால் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜன் தலைமையில் 58 பேர், ராமேஸ்வரம் தபால் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., நகர் செயலாளர் செந்தில்வேல் தலைமையில் 64 பேர், ராமேஸ்வரம் தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., வினர் 135 பேர் என 387 பெண்கள் உட்பட 729 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானை ஆண்டாள் ஊரணி கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு தொ.மு.ச., காரைக்குடி மண்டல செயலாளர் பச்சமால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.