ADDED : பிப் 14, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரையில் சி.ஐ.டி.யு., விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஸ்டேட் பேங்க் முன்பாக பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச் செயலாளர் போஸ் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் கருப்புசாமி, நிர்வாகிகள் மகாலிங்கம், மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெறவும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை முறையாக கொண்டு வரவும், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3000 வழங்க வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தினர் ஊர்வலம் வந்தனர்.
