ADDED : நவ 29, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மாதர்சங்கம், மாணவர் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்டச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் முத்து ராமு, செயலாளர் மயில்வாகனன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சந்தானம், செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர்.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.