/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன் விலை கடும் வீழ்ச்சி வியாபாரிகள் கவலை
/
மீன் விலை கடும் வீழ்ச்சி வியாபாரிகள் கவலை
ADDED : டிச 17, 2025 05:23 AM
தொண்டி: தொண்டி மீன் மார்க்கெட்டில் மீன் விலை வீழ்ச்சியால் மீனவர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. மீன் வியாபாரிகள் கவலையடைந்தனர்.
தொண்டியில் மீன் மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பல ஆயிரம் கிலோ மீன்கள் தினமும் விற்பனைக்கு வருகிறது. திருவாடானை, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு சென்று மீன்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக மீன் விலை கடும் வீழ்ச்சியடைந் துள்ளது.
தொண்டி மக்கள் கூறுகையில், ஒரு கிலோ இறால் ரூ.160க்கும், வெளமீன் ரூ.200க்கும், ஊடகம் போன்ற பல வகையான மீன்கள் ரூ.100க்கும் விற்பனையாகிறது. இந்த வகையான மீன்கள் கடந்த மாதம் ரூ.400 முதல் 500 வரை விற்பனை ஆனது என்றனர். மீனவர்கள் கூறியதாவது:
மழை பெய்து ஆறுகள் வழியாக செல்லும் நீர் கடலுக்கு செல்லும் போது மீன்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் இறால் போன்ற பல வகையான மீன் வரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஐயப்பன் மற்றும் பழநி முருகன் கோயில்களுக்கு செல்ல பல ஆயிரம் பேர் விரதம் இருப்பதால் அசைவ உணவு தவிர்க்கப்படுகிறது.
மீன்வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் பக்தர்களின் விரதம் போன்ற பல காரணங்களால் விற்பனை மந்தமாக உள்ளதால் மீன்விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

