/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் தொடர் மின்தடையால் செப்.8ல் ஒரு நாள் கடையடைப்பு வர்த்தகர் நல சங்கம் தகவல்
/
சாயல்குடியில் தொடர் மின்தடையால் செப்.8ல் ஒரு நாள் கடையடைப்பு வர்த்தகர் நல சங்கம் தகவல்
சாயல்குடியில் தொடர் மின்தடையால் செப்.8ல் ஒரு நாள் கடையடைப்பு வர்த்தகர் நல சங்கம் தகவல்
சாயல்குடியில் தொடர் மின்தடையால் செப்.8ல் ஒரு நாள் கடையடைப்பு வர்த்தகர் நல சங்கம் தகவல்
ADDED : ஆக 31, 2025 11:32 PM
சாயல்குடி: சாயல்குடியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத தொடர் மின்தடை செய்யப்படுவதால் இதனை கண்டித்து வர்த்தகர் நல சங்கம் சார்பில் செப்.,8 ல் ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
சாயல்குடி நகர் பகுதிகளில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிகழும் மின்தடையால் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வர்த்தகர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இது குறித்து சாயல்குடி துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லாத நிலையே தொடர்கிறது. சாயல்குடி வர்த்தகர் நல சங்கத்தில் சிறப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் முகம்மது அபுபக்கர், செயலாளர் செல்வ வேல், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கூறியதாவது:
சாயல்குடி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடை செய்யப்படுகிறது. இதனால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மின்சார பயன்பாட்டை நம்பி இருப்போரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. சாயல்குடி மின்வாரியத்தின் அவல நிலையை கண்டித்து வர்த்தகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செப்.,8ல் ஒரு நாள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. இது குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
சாயல்குடி நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆடு மாடு மற்றும் நாய்கள் தொல்லையால் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

