sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்கள் நூல் கோடவுன் வசதி, மருத்துவ காப்பீடு எதிர்பார்ப்பு

/

பரமக்குடியில் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்கள் நூல் கோடவுன் வசதி, மருத்துவ காப்பீடு எதிர்பார்ப்பு

பரமக்குடியில் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்கள் நூல் கோடவுன் வசதி, மருத்துவ காப்பீடு எதிர்பார்ப்பு

பரமக்குடியில் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்கள் நூல் கோடவுன் வசதி, மருத்துவ காப்பீடு எதிர்பார்ப்பு


ADDED : பிப் 17, 2024 10:59 PM

Google News

ADDED : பிப் 17, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு நிகராக பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் விளங்குகிறது. இங்குள்ள பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி நெசவை மட்டுமே நம்பி உள்ளனர்.

இவர்களது வீடுகளில் நெசவு கூடங்களை அமைத்து தொழில் செய்கின்றனர். இதன்படி ஒரு நெசவிற்கு நுால் சுற்றுதல், பின்னல் எடுத்தல் என 3 பேர் வரை தேவைப்படுகிறது.

பரமக்குடியில் உள்ள 82 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாவு, நுால் பெற்று தொழில் செய்கின்றனர். ஆனால் கூலி என்பது இன்று வரை அடிப்படை ஜீவனம் நடத்த மட்டுமே போதுமான அளவில் உள்ளது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

ரிபேட்டில் மாற்றம் வருமா


கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ஆர்டர் தரப்பட்டு சேலை நெய்யப்படுகிறது. வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அரசு ஒரு சேலைக்கு ரிபேட் மானியமாக 100 ரூபாய் என்று சீலிங் வைத்துள்ளது. இவை அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதத்தில் 150 ரூபாய் என இருக்கும்.

தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரிபேட் உச்சவரம்பு சீலிங் 100 ரூபாய் என்பது நீடிக்கிறது. ஆனால் ஜவுளி உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களின் விலை, நெசவாளர்களின் கூலி உயர்வு, அகவிலைப்படி உயர்வு என பன்மடங்கு உயர்ந்து விட்டது.

உதாரணமாக 5.50 மீட்டர் சேலை ரகம் 900 ரூபாய்க்கு விற்பனை விலை என்றால் 180 ரூபாய் ரிபேட் வழங்க வேண்டும். ஆனால் 100 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் நெசவாளர் சங்கங்கள் நலிவடைவதுடன், நுகர்வோரும் விலை அதிகம் என்பதால் கைத்தறி சேலை ரகங்களை வாங்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து விற்பனையும் முடங்குகிறது.

நிதி உதவி தேவை


நெசவாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் காலத்திற்கு ஏற்ப ரக மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் மக்களின் ரசனை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. இதனை கருத்தில் கொண்டு தறி ரக மாற்றம் செய்ய நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

பரமக்குடியில் கைத்தறி தொழிலுக்கு தேவையான அசல் பட்டு மற்றும் பருத்தி நுால் உள்ளிட்ட ரகங்களை கொண்ட கோடவுன் அமைத்து விற்பனை செய்தால் உடனுக்குடன் கச்சா பொருள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.

மரு த்துவ காப்பீடு


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணம் இல்லா மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ரூ.7500 வரை மருத்துவம் செய்து, பின்னர் ஆவணங்களின் அடிப்படையில் காசோலையாக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

முதியோ ர் ஓய்வூதி யம் உயர்வு


சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு 60 வயதை கடந்தவுடன் ரூ.1000 ஓய்வூதியம் மாதா மாதம் வழங்கப்படுகிறது.

விலைவாசியை கருத்தில் கொண்டு மாத ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கம் மட்டுமல்லாது, தனியார் மாஸ்டர் வீவர்களிடம் தொழில் செய்யும் நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி., வரி விலக்கு


ஜி.எஸ்.டி., வரியிலிருந்து கதருக்கு விலக்கு அளித்ததை போல், கைத்தறிக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சொந் த வீடுக ள்


ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் வீடு இல்லாத நெசவாளர் குடும்பங்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி சொந்த வீடு கட்டித் தர வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகளிடம் விடுத்து வரும் சூழலில் அரசு ஒன்றிணைந்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பெடரேஷன் செயலாளர் கோதண்டராமன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us