ADDED : டிச 07, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிக்கல் சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு பொருட்கள் வாங்கவும், பிற ஊர்களுக்கு பஸ் ஏறுவதற்கும் வந்து செல்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறங்களிலும் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களை வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.
ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளான தற்காலிக ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகள் பெருகி உள்ளது. இதனால் கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிக்கல் போலீசார் காலை, மாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணி செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.