ADDED : பிப் 17, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற்றனர்.
இதையடுத்து நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் 'அக்ரி ஸ்டல்க்' செயலியை பயன்படுத்த விவசாயிகளுக்கு உதவி செய்தனர். நயினார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் பானுபிரகாஷ் தலைமை வகித்தார். வேளாண் பொறியியல் அலுவலர் சுரேஷ் சர்மா பங்கேற்றார்.

