ADDED : ஆக 15, 2025 11:17 PM
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் வட்டார வேளாண் துறை சார்பில் 'உழவரைத் தேடி' மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன உர பயன்பாடு குறைப்பு மற்றும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் பாஸ்கர மணியின் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து மண்ணிற்கு ஏற்றவாறு பயிர்களை தேர்வு செய்து அவற்றை பயிரிட்டு அதிகளவில் மகசூல் பெறலாம் என கூறினார்.
வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கோபாலகிருஷ்ணன் பேசினார்.
திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம், வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் பாலாஜி, வேளாண் அலுவலர் உமாதேவி, உதவி தொழில் நுட்ப மேலாளர் ஜோசப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தங்களின் சந்தேகங்களை கூறி நிவர்த்தி செய்து கொண்டனர். அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.