/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு
/
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு
ADDED : செப் 07, 2025 03:00 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் தலைமை வகித்தார். அப்போது நாட்டுக் கோழி வளர்ப்பது மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பது உள்ள வேறுபாடுகள் குறித்தும் நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் அதிகமான லாபம் பெறலாம் என்றார்.
கால்நடை டாக்டர் வினிதா பருவகாலம் மாறுவதால் கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் குறித்தும் அதை வராமல் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். கால்நடை மருத்துவமனை அணுகி தடுப்பூசி இட வேண்டும் என்றார். வேளாண்மை அலுவலர் தமிழ்அகராதி, இயற்கை விவசாயி சிவானந்தம், துணை அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர்.