/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 18, 2025 05:24 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண் துறை சார்பில் நாரணமங்கலம் ஊராட்சி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உரம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குநர்கள் தகவல், தரக்கட்டுப்பாடு நாகராஜன், ராமநாதபுரம் உதவி இயக்குனர் அம்பேத்குமார் முன்னிலை வகித்தனர்.
வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், மண் பரிசோதனை செய்தவதன் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டது.
குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையம் இணைப்பேராசிரியர் பாலாஜி ஊட்டமேற்றிய தொழு உரத்தின் நன்மைகள் பற்றியும், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் விளக்கமளித்தார்.
வட்டார வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண் அலுவலர் ஜெயக்கொடி, உதவி தொழில் நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.