ADDED : செப் 17, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பயிற்சி முகாம் ராமநாத புரம் தியாகிகள் இல்லத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மராஜ், துணை செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.
கட்டட தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலாளர் ராஜன் கட்டட பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
பயிற்சி முகாமில் லாந்தை, புல்லந்தை, ஏர்வாடி, கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.