/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழிமறிச்சான் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
/
வழிமறிச்சான் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : பிப் 13, 2024 04:19 AM
பரமக்குடி : பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராம விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நிலக்கடலைக்கு ஜிப்சம் இட்டு மண் அனைக்கும் முறைகள், அரசு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.
அருப்புக்கோட்டை வேளாண்மை கல்லுாரி உதவி பேராசிரியர் பிரதீப்ராஜ் ரக தேர்வு, விதைக்கும் பருவம், பூஞ்சான விதை நேர்த்தி முறைகள் பற்றி கூறினார். உதவி பேராசிரியர் மோகனப்பிரியா, நிலக்கடலையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவக்குமார், தங்கவேலு, உதவி அலுவலர் கருணாகரன் பங்கேற்றனர்.