ADDED : செப் 25, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கே.ஆர்.பட்டணம் கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் சமச்சீர் உரமிடுதல், உரப்பயன்பாட்டு திறன் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் தமிழ் அகராதி தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன் உரப்பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் முறைகள், இயற்கை உரங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
மண்ணின் வளத்திற்கேற்ப நைட்ரஜன், பாஸ்பரஸ்,பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் இந்து செய்தார்.
