/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்சோ சட்டம் கையாள்வது குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி
/
போக்சோ சட்டம் கையாள்வது குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி
போக்சோ சட்டம் கையாள்வது குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி
போக்சோ சட்டம் கையாள்வது குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி
ADDED : ஜூலை 18, 2025 11:48 PM
ராமநாதபுரம்: பெண் போலீசார், சிறப்பு எஸ்.ஐ., வரையிலானவர்களுக்கு போக்சோ வழக்குகளை கையாள்வது குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி மையங்கள், காவல் பயிற்சி பள்ளிகளில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 15 பணியிடை பயிற்சி மையங்கள், தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி ஆகிய 8 காவலர் பயிற்சி பள்ளிகளில் 784 பெண் போலீசாருக்கு போக்சோ வழக்குகளை கையாள்வது குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி ஜூலை 14 முதல் 16 வரை வழங்கப்பட்டது.
இதில், பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அவற்றை கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை ஆவணப்படுத்துதல், போக்சோ மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைகள் குறித்து தெளிவு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு, அரசு உதவி குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் உடலையும், மனதையும் வலுப்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவு நாளில் சென்னையில் காவல் பயிற்சி தலைமையக டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர் பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, காவல் பயிற்சி தலைமையகத்திற்கான பிரவுச்சர், வருடாந்திர பாட நாட்காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பயிற்சி கையேடுகளை வெளியிட்டு பயிற்சியாளர்களை ஊக்குவித்தார்.
பெண் போலீசாரை தொடர்ந்து இப்பயிற்சியானது அனைத்து போலீசாருக்கும் வழங்கப்பட உள்ளது.