/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீட், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற மாணவர்களுக்கு பயிற்சி...: 5 பிளாக்குகளில் துவங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

ADDED : ஜூலை 10, 2025 02:40 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அதற்கு பிறகு உயர்கல்வியில் குறிப்பாக நீட், ஜே.இ.இ., ஐ.ஐ.டி., போன்ற நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறும் வகையில் விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்க உள்ளனர்.
தற்போது முதற்கட்டமாக 5 பிளாக்குகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் (2024--2025) 143 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். 12 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றனர். குறிப்பாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 31 பேர் தகுதி பெற்றுள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 4 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
இந்நிலையில், நீட், ஜே.இ.இ., போன்ற மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த கல்வியாண்டு துவக்கத்திலேயே பயிற்சி வகுப்புகள் துவங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவுப்படி முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் கண்காணிப்பில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், திருவாடானை, முதுகுளத்துார் பிளாக்களில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதையடுத்து கற்பித்தல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. முதலாவதாக ராமநாதபுரம் பிளாக்கில் ஆர்வமுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது என்றனர்.