UPDATED : அக் 16, 2026 05:59 PM
ADDED : அக் 16, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை வட்டாரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான புதிய பாட நுால் பயிற்சி திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட அரசு தொடக்ககல்வி அலுவலர் ரவீந்திரன் துவக்கி வைத்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி ஆசிரியர்களுக்கு பயிற்சி சார்ந்த கருத்துகளை கூறினார். 130க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.
