/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் ரசாயன உரம் பயன்பாட்டை குறைக்க பயிற்சி; விவசாயிகள் பங்கேற்பு

ADDED : ஜூலை 31, 2025 11:05 PM
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவிலில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் வல்லம் கிராமத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விவசாயி களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அப்போது விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரமிட வேண்டும். பசுந்தாள் உர பயிர்களான தக்கை பூண்டு, சணப்பை சாகுபடி செய்து 45 நாட் களுக்கு பிறகு மடக்கி உழவு செய்ய வேண்டும்.
உயிர் உரங்களான அசோபாஸ் பாஸ்போ ரைசோ பியம் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். தொழு உரங்கள் குறைவாக கிடைப்பதால் அதனை ஊட்டமேற்றி பயன்படுத்தலாம், ஆடு, மாடு எரு, மீன் கழிவு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். நானோ யூரியா பயன் படுத்தலாம், என்றார்.
நயினார்கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ், மண் பரிசோதனை நிலைய அலுவலர் கீர்த்தனா பங்கேற்றனர். விவசாயிகள் கலந்து கொண்டனர். தொழில் நுட்ப அலுவலர்கள் இளையராஜா, கதி ரேசன், ஆறுமுகம் ஏற் பாடுகளை செய்தனர்.