/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் தவிக்கும் மீனவரை மீட்க பயிற்சி
/
கடலில் தவிக்கும் மீனவரை மீட்க பயிற்சி
ADDED : ஏப் 17, 2025 02:09 AM

ராமநாதபுரம்:பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளில் கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க கடற்படை பைலட்டுகளுக்கு ெஹலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்., பருந்து கப்பற்படை விமான தளம் உள்ளது. அங்கிருந்து நவீன போர் விமானங்கள், ெஹலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் இயக்கப்பட்டு இந்திய - இலங்கை கடல் எல்லையில் கண்காணித்தல் , எல்லை தாண்டும் மீனவர்களை தடுக்கும் பணிகள் நடக்கின்றன.
விமான தளத்தில் உள்ள வீரர்களுக்கு ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் குதிப்பது. கயிறு மூலமாக கடலில் இறங்கி படகுகளை சோதனையிடுவது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி ஏழு நாட்களுக்கு நடக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.