நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத்துறை மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி பேராசிரியர் சுந்தரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் அருண் பிரசாத் ஆகியோர் மாணவர்களுக்கு தொழில் துறையில் உள்ள சவால்கள் குறித்து விளக்கினர்.