/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மைதானத்தில் டிரான்ஸ்பார்மர் மாணவர் விளையாட்டு திறன் பாதிப்பு வேறு இடத்திற்கு மாற்றக்கோரிக்கை

ADDED : டிச 25, 2024 03:48 AM

கடலாடி : கடலாடி அருகே ஆப்பனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்திற்குள் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் விளையாட வேண்டியுள்ளது. வேறு இடத்திற்கு டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ஆப்பனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 420 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தின் நடுவே உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதனை ஒட்டி 3 மின்கம்பங்கள் மைதானத்தின் நடுவில் வரிசையாக அமைந்துள்ளன.
மழைக்காலங்களில் உயரழுத்த மின்கம்பிகள் கீழே விழுந்தால் விபத்து அபாயம் உள்ளது. மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு அடைகிறது. எனவே மின் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்களை பள்ளிக்கு வெளியே உள்ள இடங்களில் அமைக்க வேண்டும். அதற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.