/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்.13ல் போக்குவரத்து ஊழியர் போராட்டம்
/
பிப்.13ல் போக்குவரத்து ஊழியர் போராட்டம்
ADDED : பிப் 09, 2025 01:27 AM
ராமநாதபுரம்:அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை துவக்க வலியுறுத்தியும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிப்.,13ல் வாயிற் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடையில் தொழிலாளர்களின் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக்கழகங்கள் செலவு செய்து விட்டன.
அந்த தொகையை வழங்க வேண்டும், 21 மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.3500 கோடியை வழங்கவேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி வழங்க வேண்டும். 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பு பிப்.,13ல் வாயிற்கூட்டம் நடத்த சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் கூறினர்.