/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்து தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 27, 2025 10:08 PM

ராமநாதபுரம் : -ஊதிய ஒப்ந்த பேச்சு வார்த்தையை துவக்கக் கோரி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் கிளை முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்கக் கோரியும், மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முழுமையாக ஒப்பந்த நிலுவைத்தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்குவது போல் சமமாக அகவிலைப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.டி.எல்.எப்., தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் புறநகர் கிளை பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., கிளை செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமேஸ்வரம் கிளை முன்பு சி.ஐ.டி.யு., கிளை செயலாளர் செல்லகுண்டு தலைமையிலும். பரமக்குடி கிளை முன்பு சி.ஐ.டி.யு., கிளை தலைவர் மணிமாறன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.