தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த துண்டு பிரசுரம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த துண்டு பிரசுரம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த துண்டு பிரசுரம்


ADDED : ஜன 02, 2024 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர். இது குறித்து மக்களிடம் விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில்உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்,வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்க வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜன.4க்கு மேல் வேலை நிறுத்தப்போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துஉள்ளனர்.

வேலை நிறுத்தத்திற்கான காரணத்தை மக்களிடம் எடுத்து சொல்லி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., நகர் கிளை சார்பில் அரண்மனைப் பகுதியில் வழங்கப்பட்டது. புறநகர் கிளை சார்பிலும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us