ADDED : மார் 04, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; முதுகுளத்துார்-- கமுதி சாலையில் பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு வீடுகளில் பயன்படுத்தும் குப்பையை கொட்டி வந்தனர்.
இங்கு இரும்பு குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டது.
தற்போது இவை சேதமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது.
இதனால் இங்கு குப்பை கொட்டுவதால் சாலையோரத்தில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கால்நடைகள் குப்பையை கிளறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
காற்றில் குப்பை பறந்து ஆங்காங்கே கிடக்கிறது.
அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவர் விடுதி உள்ளதால் இவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள் முகம் சுளிக்கின்றனர்.
எனவே இவ்விடத்தை சுத்தம் செய்து புதிய குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

