ADDED : அக் 14, 2024 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடியுடன் மழை பெய்யும் போது மருங்கூர் கிராமத்தில் வீடுகளுக்கு முன்பிருந்த தென்னைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தீ பிடித்து கிளைகள் முறிந்து விழுந்தது.
மழை பெய்ததால் சிறிது நேரத்தில் தீ அணைந்தது. மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், மின் அழுத்தம் அதிகமாகி ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விசிறிகள் பாதிக்கபட்டன.