ADDED : செப் 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
தொடர்ந்து அறக்கட்டளைக்கு ஆம்புலன்ஸ் நன்கொடை வழங்கிய, தொழிலதிபர் முகமது சித்திக்கிற்கு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஊரின் முக்கிய பகுதிகள் மற்றும் ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மரக்கன்று நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜமாத் நிர்வாகிகள் உட்பட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
––
