தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் சூறாவளி காற்றால் சாய்ந்த மரங்கள்

 பரமக்குடியில் சூறாவளி காற்றால் சாய்ந்த மரங்கள்

 பரமக்குடியில் சூறாவளி காற்றால் சாய்ந்த மரங்கள்


ADDED : ஜூன் 22, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று மாலை திடீரென வீசிய சூறைக்காற்றால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்ததால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்கிறது. இதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு பலத்த சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து சேதுபதி நகர் அருகில் பழமையான மரம் சாய்ந்து மின் கம்பம் முறிந்தது. இதே போல் புதுநகர் உட்பட ஆங்காங்கே மரக் கிளைகள் உடைந்து வயர்கள் அறுபட்டன.

இதனால் காட்டு பரமக்குடி 110 கே.வி., மின் நிலையத்திலிருந்து சப்ளை ஆகும் பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில், சத்திரக்குடி என அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மின் சப்ளை வழங்கப்பட்டது. மேலும் வயர்கள் அறுந்த பகுதிகளுக்கு பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதே போல் பிளக்ஸ் பேனர்களும் ஆங்காங்கே சாய்ந்தன. இந்நிலையில் தெளிச்சத்தநல்லுார், வேந்தோணி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக மதியம் துவங்கி நள்ளிரவு வரை தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us